satrumun


★ இணையமலர் தமிழ் No 1 இணையதள நாளிதழ் | தமிழக அரசியல்| கல்வி மலர் | மாவட்டம் | சினிமா மலர் | விவசாயமலர் | இந்தியா| பொது | போட்டோ | கார்ட்டூன்ஸ் |புத்தக மதிப்புரை |உலக தமிழர் செய்திகள் | கலை மலர் | சிறப்பு மலர்| விளையாட்டு மலர் |ஆன்மிக மலர் | உலகம்★

Thursday, May 13, 2021

இன்று முதல் கடும் நடவடிக்கை : டி.ஜி.பி., திரிபாதி எச்சரிக்கை


latest tamil news

சென்னை :'முழு ஊரடங்கு உத்தரவை மீறுவோர்கள் மீது, இன்று முதல் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.ஜி.பி.,திரிபாதி எச்சரித்துள்ளார்.


நேற்றிரவு அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கொடிய கொரோனா நோயை கட்டுப்படுத்த, தமிழகத்தில், மே, 10ல் இருந்து, முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தி உள்ளது.இதையொட்டி, அனைத்து இடங்களிலும், காவல் துறை சார்பில், ஒலி பெருக்கி வாயிலாகவும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும், 'முக கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம்' என, அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.




இந்த அறிவுரைகளை சிலர் சரியாகவும், ஒழுங்காகவும் பின்பற்றாததால், கொடிய தொற்று மேலும் அதிகமாக பரவ வாய்ப்பு உள்ளது.

அதனால், இன்று முதல், முழு ஊரடங்கு உத்தரவை மீறி, தேவையில்லாமல் வெளியில் வாகனங்களில் செல்வோர் மற்றும் நடமாடுவோர் மீது, தகுந்த சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, எச்சரிக்கப்படுகிறது.சட்டப்பூர்வ நடவடிக்கையில் இருந்து, பொது மக்கள் தங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, திரிபாதி கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு ரூ.7,300 கோடி நன்கொடை வழங்கிய 27 வயது சி.இ.ஓ.,!

 


டொரன்டோ: பிட்காயினுக்கு அடுத்தப்படியாக மிகப்பெரிய அளவில் புழங்கக்கூடிய கிரிப்டோகரன்சி 'எதிரியம்'. அதன் இணை நிறுவனரும், சி.இ.ஓ.,வுமான 27 வயது இளைஞர் விட்டாலிக் பூட்டரின், கொரோனா நிவாரண நிதியாக ரூ.7,300 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சியை வழங்கியுள்ளார்.

கொரோனாவின் 2-ம் அலையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உலக நாடுகள் பலவும் உதவிக்கரம் நீட்டியுள்ளன. கூகுள் நிறுவனம் ரூ.135 கோடியும், டுவிட்டர் ரூ.110 கோடியும் அறிவித்தன. இது போன்ற பல முன்னணி நிறுவனங்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள், தடுப்பூசிகளுக்கு நன்கொடை வழங்கி வருகின்றன. இந்நிலையில் தான் எதிரியம் கிரிப்டோகரன்சி இணை நிறுவனர் விட்டாலிக் ரூ.7,300 கோடி நன்கொடை அறிவித்துள்ளார்.

ரஷ்யாவில் பிறந்து கனடாவிற்கு புலம்பெயர்ந்தவரான விட்டாலிக் தனது 19 ஆவது வயதில் எதிரியம் கிரிப்டோகரன்சியை உருவாக்கினார். சிறந்த புரோகிராமரான இவர் பணப்பரிவர்த்தனையில் வங்கிகளிடம் அதிகாரம் செல்லாமல், அவை பணம் புழங்கக் கூடிய மக்களிடமே பரவலாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கிரிப்டோகரன்சியை உருவாக்கினார். ஒரு எதிரியத்தின் இன்றைய (மே 13) இந்திய மதிப்பு ரூ.3.1 லட்சம் ஆகும். இவர் 500 எதிரியம் (ரூ.15 கோடி) மற்றும் 50 டிரில்லியன் ஷிபு இனு நாணயங்களை நன்கொடை அளித்துள்ளார்.

இந்தியா கிரிப்டோகரன்சி நன்கொடைகளை பெறுவதற்காக கோவிட் கிரிப்டோ நிவாரண நிதி என்ற ஒன்றை உருவாக்கியுள்ளது. அந்த நிதிக்கு எதிரியம், பிட்காயின், டோஜ், ட்ரான், காஸ்மாஸ், டெசோஸ் போன்ற பல கிரிப்டோகரன்சிகளை கொண்டு நிதியளித்தால் ஏற்றுக்கொள்வார்கள்.

இதுவரை இந்த நிதியிலிருந்து ஐ.சி.யூ வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுக்காக ராஜீவ் நினைவு அகாடமிக் நலவாழ்வு அறக்கட்டளைக்கு ரூ.55 லட்சமும், ரவுண்ட் டேபிள் அறக்கட்டளைக்கு ரூ.94 லட்சமும், ஏ.சி.டி. கிராண்ட்ஸ் மற்றும் யுனைடெட் வே ஆப் பெங்களூரு ஆகிய அறக்கட்டளைகளுக்கு ரூ.7 கோடியும் அளிக்கப்பட்டுள்ளன.

எம்எல்ஏ.,க்கள் மக்களின் பக்கம் நிற்கவேண்டிய காலகட்டம்: முதல்வர் அறிவுறுத்தல்

 


சென்னை: திமுக எம்எல்ஏ.,க்கள் மக்களின் பக்கம் உறுதியாக நிற்கவேண்டிய காலகட்டம் இது என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.


தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: மே 7-ம் தேதி அமைந்த அரசு போர்க்கால அடிப்படையில் கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தியை பெருக்குவற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தனியார் அமைப்புகளும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி உதவுகின்றன. தேர்தலுக்கு முன்பாகவே ‛ஒன்றிணைவோம் வா' நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினோம். கபசுரக் குடிநீர், முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை வழங்கி திமுக.,வினர் மேற்கொண்ட பணிகள் பொதுமக்களுக்கு பாதுகாப்பானதாக இருந்தது.

ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து, படுக்கை வசதி என உயிர்காக்கும் பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கழகத்தின் சார்பில் ‛ஒன்றிணைவோம் வா' செயல்திட்டத்தை மீண்டும் துவங்கிட வேண்டும் என தொண்டர்களை கேட்டுக் கொள்கிறேன். சட்டசபை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்எல்ஏ.,க்கள் மக்களின் பக்கம் உறுதியாக நிற்கவேண்டிய காலகட்டம் இது. பொறுப்புடனும், தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தனி மனித இடைவெளியைக் கடைப்பிடித்து பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும். நானும் தொண்டர்களை போலவே களத்தில் இருப்பேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


எம்எல்ஏ.,க்கள் - எம்பி.,க்கள் ஊதியம்


முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திமுக எம்எல்ஏ.,க்கள் மற்றும் எம்பி.,க்கள் ஒரு மாத ஊதியத்தை அளிப்பார்கள் என முதலவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முன்னதாக திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது. ஸ்டாலினின் மகனும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி எம்எல்ஏ.,வுமான உதயநிதி ஸ்டாலின் ரூ.25 லட்சம் கொரோனா நிவாரண நிதிக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.